தந்தையை கொன்ற கொலையாளிகளை மன்னித்த மகன்கள்..! உலகிற்கு கூறிய உருக வைக்கும் வார்த்தைகள்!

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் மகன், தனது தந்தையை கொன்ற கொலையாளிகளை மன்னிப்பதாக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சவுதி அரசாங்கத்தின் முக்கிய விமர்சகரான கஷோகி, துருக்கிய நகரமான இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் 2018 அக்டோபரில் கொல்லப்பட்டார்.

அவரது மரணம் ‘மோசமான நடவடிக்கையின்’ விளைவாக இருந்ததாகவும், அது அரசால் அனுமதிக்கப்படவில்லை என்றும் சவுதி அதிகாரிகள் கூறினர்.

ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் சில புலனாய்வு அமைப்புகள் மற்றும் ஐ.நா-வால் சந்தேகிக்கப்படுகிறது.

கஷோகி வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளுக்காக எழுதி வந்தார், இறப்பதற்கு முன்பு அமெரிக்காவில் வசித்து வந்தார்.

சவுதியில் ரகசிய விசாரணையின் பின்னர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதில் பங்கு வகித்ததற்காக பெயரிடப்படாத ஐந்து பேருக்கு 2019 டிசம்பரில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் காலமார்ட், சவுதி விசாரணையை நீதிக்கு எதிரானது என்று விமர்சித்து சுயாதீன விசாரணையை வலியுறுத்தினார்.

கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் அவரது மகன் சலா, தனது தந்தையை கொலை செய்தவர்களை மன்னிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டார்.

அதில், ஆசீர்வதிக்கப்பட்ட ரமலான் மாதத்தின் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட இரவில், கடவுள் சொல்வதை நினைவில் கொள்கிறோம். ஒரு நபர் மன்னித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால், அவனுடைய வெகுமதி அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும்.

எனவே, தியாகி ஜமால் கஷோகியின் மகன்களான நாங்கள் எங்கள் தந்தையை கொன்றவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாக அறிவிக்கிறோம், சர்வவல்லமையுள்ள கடவுளிடம் வெகுமதி கோருகிறோம் என கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்