வெளிநாட்டிலேயே நான் இறக்கலாம் என கண்ணீர் வீடியோ வெளியிட்ட தமிழ் இளைஞர் சொந்த ஊர் திரும்புகிறார்! மகிழ்ச்சி தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
6222Shares

துபாயில் மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு சிரமப்படுவதாக கூறி தமிழ் இளைஞன் வீடியோ வெளியிட்டு கண்ணீர் விட்ட நிலையில் அவருக்கு மருத்துவ உதவி கிடைத்ததோடு சொந்த ஊருக்கு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டம் போடியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கணேஷ்குமார். இவர் கடந்த ஜனவரி மாதம் ஏஜண்ட் மூலம் லட்சங்களில் செலவு செய்து துபாய்க்கு வேலை தேடி சென்றார்.

ஆனால் கொரோனா தாக்கத்தால் அவருக்கு வேலை கிடைக்காத சூழலில் நண்பர்களுடன் தங்கினார்.

அப்போது கணேஷ்குமாருக்கு மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டது. இதையடுத்து அவரின் உடல்நிலை மோசமடைந்து அதிகளவில் எடை குறைந்தார்.

பின்னர் கண்ணீருடன் ஒரு வீடியோவை வெளியிட்ட கணேஷ்குமார், எப்படியாவது என்னை ஊருக்கு கூட்டி செல்லுங்கள்.

இப்படியே இருந்தால் நான் இரண்டு நாட்களில் இறந்துவிடலாம், அப்படி இறந்தால் என் சடலத்தையாவது ஊருக்கு அனுப்பி வையுங்கள் என கூறியிருந்தார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் தேனி எம்.பியும், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்குமாரின் நண்பர்கள், துபாய் தமிழ் சங்கம் ஆகியோரின் உதவியுடன் இன்று இரவு கொச்சி விமான நிலையம் வரும் கணேஷ்குமார், சொந்த ஊருக்கும் இன்றே செல்லவுள்ளார்.

இதனிடையில் அவருக்கு மருத்துவமும் துபாயில் பார்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய கணேஷ்குமார், வேலை தேடி வந்த இடத்தில் எனக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என கனவில் கூட நினைக்கவில்லை, வேதனையான நாள்களைக் கடந்து வந்திருக்கிறேன்.

வெளியுறவுத் துறையை தொடர்புகொண்டு நான் ஊர் திரும்ப உதவிய தமிழக எம்.பி ரவீந்திரநாத்குமார் மற்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருக்கு நன்றி என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்