வெளிநாட்டில் உயிருக்கு போராடும் கணவன்! தந்தையின் இறுதிச் சடங்கிற்கு சென்ற மனைவி: பரிதாப பின்னணி

Report Print Santhan in ஏனைய நாடுகள்
408Shares

தந்தையின் இறுதிச்சடங்கிற்காக இந்தியா சென்ற மகள், தற்போது துபாயில் தன் கணவன் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதால், அவரை பார்க்க முடியாமல், அங்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்.

51 வயது மதிக்கத்தக்க Kusum Khemani என்பவர் கடந்த மார்ச் மாதம் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக துபாயில் இருந்து இந்தியா சென்றுள்ளார்.

ஆனால், தற்போது அவரின் கணவர் துபாயில் உடல் நிலை சரியில்லாமல் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் இந்தியாவில் ஊரடங்கு காரணமாக சிக்கியிருக்கும் இவர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு, தன் கணவனை பார்க்க செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துள்ளார்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு, ராஜஸ்தானில் இருக்கும் Kusum Khemani கூறுகையில், இந்த 2020-ஆம் ஆண்டு எனக்கு ஒரு மோசமான ஆண்டாக துவங்கியுள்ளதாக கூறுவேன்.

gulfnews

ஏனெனில், கடந்த டிசம்பர் மாதம் தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், இந்தியாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் மாதம் வரை அங்கு தங்கியிருந்தேன்.

நான் என் கணவர் மற்றும் மூன்று மகள்களை விட்டு மூன்று மாதங்களாக விலகி இருந்தேன். அதன் பின் இறுதியாக மார்ச் 7-ஆம் திகதி துபாய் திரும்பினேன். நான் வந்த நான்கு நாட்களுக்கு பின் என் தந்தை இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது.

இதனால் நான் மீண்டும் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் திகதி இந்தியாவிற்கு பறந்தேன். தந்தையின் இறுதிச்சடங்கு மற்றும் அதற்கான சடங்குகள் முடியும் வரை இந்தியாவில் தங்கினேன்.

ஆனால், இப்போது நான் துபாய்க்கு செல்ல வேண்டும். ஏனெனில் என் கணவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்.

இப்போது நான் இங்கு வந்து 60 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் மற்றும் அவரது உயிருக்கு போராடுகிறார். அவர் துபாயில் உள்ள ஒரு பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் வென்டிலேட்டரில் இருக்கிறார், இந்த சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பது, என் மூன்று மகள்களும் அங்கு மிகுந்த வேதனையில் இருக்கின்றனர்.

கடவுள் மற்றும் துபாய் அரசாங்கத்திடம் கெஞ்சி கேட்கிறேன், என்னை என் குடும்பத்துடன் சேர்த்து வைக்க உதவுங்கள். நான் செல்வதற்கான விண்ணப்பம் மிக விரைவில் அங்கீகரிக்கப்பட்டால், நான் எப்போதுமே நன்றியுள்ளவனாக இருப்பேன், இந்த கடினமான நேரத்தில், நான் என் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

Kusum Khemani மகள்களில் மூத்த மகளான Srishti Kemani கூறுகையில், ஜவுளி தொழில் செய்து வந்த என் தந்தை கடந்த மாதம் 30-ஆம் திகதி நோய்வாய்ப்பட்டார். முதலில் லேசான காய்ச்சல் ஏற்பட்டது.

மே 10-ஆம் திகதிக்குள், அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது, அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அதன் பின் அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. ”

மே 19-ஆம் திகதி அன்று, அவரது நிலைமை மோசமாகிவிட்டதால், அவர் ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்டார்.

அவர் இப்போது வென்டிலேட்டரில் இருக்கிறார். என் இரண்டு தங்கைகளும் நானும் இருக்கிறோம். வேறு யாரும் இல்லை, நாங்கள் மிகவும் உதவியற்றவர்களாக உணர்கிறோம். எங்கள் அம்மா இங்கே இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இது எங்கள் தந்தையின் நிலைக்கும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்