97 உயிர்களை பலிவாங்கிய விமான விபத்தின் சிசிடிவி காட்சி வெளியானது

Report Print Basu in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானை அதிர வைத்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ-320 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

PIA விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு பறந்து கொண்டிருந்தது. அப்போது கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 97 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் விமானம் விழுந்த பகுதியில் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் அதிர்ஷ்டவசமாக விமாத்தில் பயணித்த 2 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.

கராச்சி மாடல் காலனியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்து சிசிடிவி கமெராவில் பதிவான விமானம் விபத்துக்குள்ளான காட்சிகளை சமூக ஊடக பயனர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

20 வினாடிகளுக்கும் குறைவான நீளமுள்ள இந்த வீடியோவில், விமானம் வேகமாக இறங்குவதைக் காட்டுகிறது, பின்னர் தொலைவில் விபத்துக்குள்ளாகி வெடித்து புகை வானத்தில் சூழ்ந்ததை காட்டுகிறது.

இந்த விபத்து தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என பாகிஸ்தான் விமானிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்