99 பேருடன் விமானம் விழுந்து நொறுங்கியும்... உயிர் தப்பியது எப்படி? திக் திக் நிமிடங்களை விளக்கிய பயணி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் விமான விபத்தில் இருந்து உயிர் தப்பிய பயணி ஒருவர், விமானத்தில் இருந்து உயிர் தப்பிய நிமிடங்களை விளக்கியுள்ளார்.

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 99 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போது தரையிரங்க முற்பட்டது.

ஆனால், விமானத்தில் திடீரென்று ஏற்பட்ட கோளாறு காரணமாக, இரண்டாம் முறை தரையிறங்க முயற்சித்த போது, அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

Bank of Punjab president Zafar Masood (mirror.co.uk)

இதில் அதிர்ஷ்டவசமாக 2 பேர் உயிர் பிழைத்தனர். இதுவரை 80-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சில வீடுகள் முற்றிலுமாக இடிந்துள்ளதால், மீட்கப்பட்ட உடல்கள் விமானத்தில் பயனித்தவர்கள் தானா என்பது உறுதி செய்யப்படவில்லை.

குறித்த விபத்தில் உயிர் பிழைத்தவர்களில் ஒருவர் பஞ்சாப் வங்கியின் தலைவர் சாபர் மசூத், மற்றொருவர் பொறியாளர் முகமது சுபைர். இவர்கள் கராச்சி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் ஜியோ செய்தி நிறுவனத்திற்கு முகமது சுபைர் அளித்த பேட்டியில், முதல் தரையிறக்கத்தின் போது விமானம் தரையை தொட்டுவிட்டு விரைவில் மீண்டும் பறந்தது.

Engineer Muhammad Zubair(mirror.co.uk)

சுமார் 10 நிமிடங்கள் பறந்த பிறகு, விமானி தான் இரண்டாவது முயற்சியை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார். அதற்குள் விமானம் மோதி விபத்துக்குள்ளானது.

சுற்றிலும் புகை மற்றும் நெருப்பை மட்டுமே பார்க்க முடிந்தது. எல்லா திசைகளில் இருந்தும் அலறல் சத்தம் மட்டுமே கேட்டது.

குழந்தைகள், பெரியவர்களின் அலறல். யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை. சீட் பெல்ட்டை விடுவித்து வெளிச்சம் வந்த திசையில் சென்றேன். அங்கிருந்து 10 அடி கீழே குதித்து உயிர் பிழைத்ததாக கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்