ஹிட்லரின் செல்லப்பிராணி என கருதப்படும் முதலை உயிரியல் பூங்கா ஒன்றில் மரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் பிரித்தானிய ராணுவத்தினரால் மீட்கப்பட்ட முதலை ஒன்று ரஷ்யாவில் உயிரியல் பூங்கா ஒன்றில் மரணமடைந்துள்ளது.

தற்போது 84 வயதாகும் குறித்த முதலையானது இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பெர்லின் நகரில் வைத்து பிரித்தானிய ராணுவத்தினரால் மீட்கப்பட்டது.

பின்னர் சோவியத் ரஷ்ய ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. Saturn என அழைக்கப்பட்டு வந்த குறித்த முதலையானது 1946 முதல் மாச்கோவில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

உலகப்போருக்கு முன்னர் நாஜி ஜேர்மனியில் பெர்லின் உயிரியல் பூங்காவில் இந்த முதலை பார்வையாளர்களை ஈர்த்து வங்துள்ளது.

மட்டுமின்றி ஹிட்லரின் செல்லப்பிராணிகள் வரிசையில் குறித்த முதலையும் இடம்பெற்றிருந்ததாக ஒரு வதந்தியும் பிரபல ரஷ்ய எழுத்தாளர் ஒருவரால் பரப்பப்பட்டது.

இந்த மாத துவக்கத்தில் ஐரோப்பிய நாடுகள் ஹிட்லரின் வீழ்ச்சியின் 75 ஆம் ஆண்டை கொண்டாடும் வரை குறித்த முதலையானது உயிருடன் இருந்துள்ளது.

இந்த முதலையானது 1936 ஆம் ஆண்டில் மிசிசிப்பியில் உள்ள காடுகளில் பிறந்து பின்னர் பிடிக்கப்பட்டு பெர்லின் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பப்பட்டது.

1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெர்லின் நகரம் முற்றாக அழிக்கப்பட்ட வேளையில், குறித்த முதலையை யார் பாதுகாத்தார் என்பது மர்மமாகவே உள்ளது.

ஆனால் பெர்லினில் வான் தாக்குதல் நடந்து மூன்றாண்டுகளுக்கு பின்னர் குறித்த முதலையை பிரித்தானிய ராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

சிலர் கழிவு நீர் ஓடையில் புகுந்து இந்த முதலை தப்பியதாக கூறுகின்றனர், ஆனால் சிலர் மூத்த நாஜி தலைவர் ஒருவர் இதை பாதுகாத்ததாகவும் கூறுகின்றனர்.

மாஸ்கோ உயிரியல் பூங்காவில் வைத்து பலமுறை உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருந்து இந்த முதலை அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளது.

பூங்காவை பார்வையிட வந்த ஒருவர் கல்லால் அடித்து கொல்லப் பார்த்ததும் நடந்தது. இதனால் சில மாதங்கள் மருத்துவ சிகிச்சையிலும் இருந்துள்ளது.

மேலும், புதிய இடத்திற்கு தம்மை இடம் மாற்றியதாக கூறி சுமார் நான்கு மாதங்கள், உணவேதும் சாப்பிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்