‘நான் செய்தது தவறு’... உண்மையை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட ஜனாதிபதி

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஆஸ்திரியாவின் ஜனாதிபதி அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன், நாட்டின் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

மே 15 முதல் ஆஸ்திரியாவில் உள்ள உணவகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன, ஆனால் சமூக இடைவெளி, இரவு 11 மணிக்கு உணவகங்களை மூட வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வான் டெர் பெலன் சனிக்கிழமை இரவு 11 மணிக்குப் பிறகு உணவகத்தில் ஒன்றில் இருந்துள்ளார்.

ஊரடங்கு பின்னர் இரண்டு நண்பர்கள் மற்றும் என் மனைவியுடன் நான் முதல் முறையாக வெளியே சென்றேன் என்று வான் டெர் பெலன் ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் தெரிவித்தார்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது நேரம் கடப்பதை மறந்தோம், நான் மிகவும் வருந்துகிறேன். இது ஒரு தவறு என குறிப்பிட்டுள்ளார்.

வான் டெர் பெல்லன் சென்ற உணவகம் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. உரிமையாளருக்கு அபராதம் ஏற்பட்டால் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்வேன் என்று ஆஸ்திரிய ஜனாதிபதி கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்