பாகிஸ்தான் விமான விபத்தில் பலியானதாக கருதப்படும் மொடல் அழகி! இறந்தாலும் தொடரும் விமர்சனம்...

Report Print Abisha in ஏனைய நாடுகள்

பழமைவாத மனநிலை கொண்ட பாகிஸ்தானில், மொடல் அழகி ஒருவர் விமான விபத்தில் பலியானதாக கருதப்பட்ட நிலையில், தற்போது அவரை அங்குள்ள மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் கராச்சியில் விமானம் விபத்திற்குள்ளானதில்

ஜாரா ஆபிட் என்ற மொடல் அழகி பலியானாக கூறப்படுகிறது. 28 வயதே ஆன ஜாரா ஆபிட்டின் சமூகவலைதள பக்கங்கள், உடைகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்ததால் முடக்கப்பட்டது.

இந்நிலையில்,அவர் விமான விபத்தில் பலியான பின்பும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளனர். சிலர் அவர், பிழைத்திருப்பார் சமூகவலைதளத்தை முடக்க இதுபோன்ற நாடகம் ஆடுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

அதற்கு ஜாராவின் சகோதரர் இதுபோன்ற பொய் செய்திகள் எதுவும் பரப்ப வேண்டாம் என்று ஊடகம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், ஜாராவின் சமூகவலை தள பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளது. இதை அவரது குடும்பத்தினர், அல்லது நண்பர்கள் செய்திருப்பார்களா என்று சரியாக தெரியவில்லை.

ஜாரா பாகிஸ்தானின் மிக முன்னணி பிராண்டுகளுக்கு மொடலாக இருந்தார். இவர், பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஆனால், சிலர் அவருக்கு மரணத்திற்கு பின் அல்லா நிச்சயம் தண்டனை வழங்குவார் என்று தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்