வெளிநாட்டில் இரண்டு மகள்களுடன் தவிக்கும் இந்திய தாய்! கணவனின் வருகைக்காக காத்திருக்கும் பரிதாபம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்தியாவில் கணவர் சிக்கி தவிப்பதால், ஷார்ஜாவில் அவரின் குடும்பம் கடுமையான நிதி நெருக்கடியால் தவித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு சென்றவர்கள், திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இருப்பினும் அந்தந்த நாட்டு அரசு அவ்வப்போது தங்கள் நாட்டு மக்களுக்காக விமானங்களை அனுப்பி வைக்கின்றனர்.

இந்நிலையில், ஷார்ஜாவில் வசித்து வரும் இந்திய குடும்பம், தற்போது இந்தியாவில் சிக்கி தவிக்கும் கணவரை வருகை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஷார்ஜாவின் Al Nahda-வில் தன் கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருபவர் Sephali Panigrahi.

gulfnews-Image Credit: Supplied

இவரின் கணவர் கடந்த மார்ச் மாதம் 15-ஆம் திகதி தந்தையை விடுவதற்காக இந்தியா சென்றுள்ளார். நான்கு நாட்களில் திரும்பிவிடுவார் என்பதால், கிரெடிட் கார்டுகளை அலுவலக லாக்கரில் வைத்து விட்டு சாவியை கொண்டு சென்றுள்ளார்.

ஆனால், தற்போது இந்த கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவின் சிவப்பு மண்டலம் என்றழைக்கப்படும் மும்பையில் அவர் சிக்கிக் கொண்டார். அவரால் தற்போதைக்கு ஷார்ஜா திரும்ப முடியவில்லை.

இதனால் Sephali Panigrahi தன்னுடைய இரண்டு மகள்களை வைத்துக் கொண்டு கடுமையான நிதி நெருக்கடியை எதிர் கொண்டு வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்க்கவேயில்லை. நான்கு நாட்களில் திரும்பிவிடுவார் என்பதால், நாங்களும் சாதாரணமாக இருந்துவிட்டோம்.

ஆனால் இப்போது எங்களிடம் இருந்த பணம் தீர்ந்துவிட்டது. எங்களிடம் இருக்கும் பணம் உள்நாட்டு பணமதிப்பான திர்ஹாம்முக்கு குறைவாகவே இருக்கிறது.

எட்டாம் வகுப்பில் படிக்கும் என் இளைய மகளுக்கு பள்ளியிலிருந்து ஒரு இறுதி எச்சரிக்கை கிடைத்துள்ளது. நான் உடனடியாக அவளது கட்டணத்தை செலுத்தவில்லை என்றால், அவளை நீக்குவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர்.

வங்கிகளிடமிருந்து எங்களுக்கு நிலுவைத் தொகையை கோருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாட்டில் சிக்கியுள்ள ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்தால் ஜூன் 1 முதல் திரும்ப முடியும்.

கணவரின் ஐசிஏ விண்ணப்பம் இன்னும் அங்கீகரிக்கப்படாததால் தான் நம்பிக்கையை இழந்து நிற்கிறேன்,

அவர் ஒரு நீரிழிவு நோயாளி, ஆஸ்துமாவால் அவதிப்படுகிறார்.

அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்து உள்ளூர் சந்தையில் கிடைக்கவில்லை. அவரது உடல்நிலை குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்