விபத்தில் சிக்கிய விமானத்தில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் கண்டுபிடிப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் நாட்டில் விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்து 2 பைகளில் பல்வேறு நாடுகளின் பணக்கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 22 ஆம் திகதி லாகூரில் இருந்து கராச்சிக்கு சென்ற விமானம் தரை இறங்க முயன்ற போது அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் 97 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். முதலில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு என கருதப்பட்ட நிலையில்,

விமானம் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டு நிலைய எச்சரிக்கையை விமானி மீறியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் விமானத்தின் இடிபாடுகளில் இருந்த உடைமைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது.

அப்போது 2 பைகளில் பல்வேறு நாடுகளின் பணக்கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 30 மில்லியன் இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இந்த பணம் யாருடையது என்றும் விமான நிலைய சோதனையை மீறி பெரிய தொகை எப்படி விமானத்தில் கொண்டு வரப்பட்டது என்றும் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விமான விபத்தில் உயிர் தப்பிய இருவரில் ஒருவர் பஞ்சாப் வங்கியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்