கொரோனா விதிகளை மீறிய மது பாட்டில்களுடன் அமைச்சர்களுடன் கும்மாளமடித்த நாட்டின் பிரதமருக்கு நேர்ந்த நிலை! வெளியான புகைப்படம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா விதிகளை மீறியதற்காக ருமேனியாவின் பிரதமருக்கு அபராதம் வதிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் புகைபிடித்ததற்காக மற்றும் அரசாங்க கட்டிடத்தில் அவர் நடத்திய கூட்டத்தில் பல அமைச்சர்கள் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் சமூக இடைவெளி விதிகளை பின்பற்றாததால் பிரதமர் லுடோவிக் ஓர்பன் சுமார் 600 டொலர் அபராதம் செலுத்தியுள்ளார்.

ருமேனிய ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில், பிரதமர் லுடோவிக் ஓர்பன் மற்றும் பலர் உணவு மற்றும் மது பாட்டில்களுடன் ஒரு மேஜையில் புகைபிடிப்பதைக் காணலாம்.

புகைப்படத்தில் யாரும் முகமூடி அணியவில்லை, விதிக்கப்பட்ட சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

அவரது பிறந்த நாளான மே 25 அன்று குறித்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இதில் கலந்து கொண்டவர்களில் ருமேனியாவின் வெளியுறவு அமைச்சரும் பொருளாதார அமைச்சரும் அடங்குவர்.

ருமேனியாவில் 19,133 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் 1,259 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்