பிரித்தானியா ஊரடங்கை நீக்குவதால் மக்கள் நிம்மதியடைய வேண்டாம்! ஸ்காட்லாந்து முதலமைச்சர் எச்சரிக்கை

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் இன்னும் ‘குறிப்பிடத்தக்க ஆபத்தை’ ஏற்படுத்தும் என ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் எச்சரித்துள்ளார்.

திங்களன்று சில ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்க பிரித்தானியா அரசாங்கம் தயாராகி வருவதால் குடிமக்கள் நிம்மதியடைய வேண்டாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வைரஸ் நீங்கவில்லை, கொரோனா மீண்டும் கட்டுப்பாடுத்த முடியாத அளவிற்கு பரவக்கூடிய குறிப்பிடத்தக்க ஆபத்து இன்னும் உள்ளது என்று ஸ்டர்ஜன் கூறினார்.

ஸ்காட்லாந்தில், நாங்கள் மிகவும் மெதுவாக, மிகவும் எச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுக்கிறோம்.

ஊரடங்கை தளர்த்தும் எங்கள் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இப்போது சென்றுள்ளோம், அந்த கட்டத்தில், தொற்றுநோய் முழுமையாக கட்டுப்படுத்தப்படாததால் குறிப்பிடத்தக்க ஆபத்து உள்ளது என்பதை இது வெளிப்படையாக அங்கீகரிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

பிரித்தானியா அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவான SAGE உறுப்பினர்கள் அதிருப்தி வெளிப்படுத்திய போதிலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான படிப்படியான செயல்முறையை பிரித்தானியா திங்களன்று தொடங்குவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்