தேவாலயத்துக்கு உள்ளே 22 வயது இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை! பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நைஜீரியாவில் 22 வயது இளம்பெண் தேவாலயத்துக்குள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edo மாகாணத்தை சேர்ந்தவர் உவாலா ஒமோசுவா (22).

கல்லூரி மாணவியான இவர் படிப்பதற்காக தினமும் அங்குள்ள தேவாலயத்துக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தேவாலயத்துக்கு உவாலா செல்லும் அங்கிருந்த பாதுகாவலர் சாவியை வாங்க வெளியில் சென்றுள்ளார், அப்போது உவாலா மட்டும் உள்ளே இருந்தார்.

பின்னர் பாதுகாவலர் தேவாலயத்துக்குள் வந்த போது உவாலா இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதையடுத்து உவாலா உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

இறப்பதற்கு முன்னர் அவர் அளித்த மரண வாக்குமூலத்தில், தேவாலயத்துக்குள் தான் தனியாக இருந்த போது மர்ம நபர் உள்ளே வந்து தன்னை பலாத்காரம் செய்ததோடு, கனமான பொருளால் தலையில் அடித்தார் என கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டும் பொலிசார் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து உவாலாவின் குடும்பத்தார், நண்பர்கள் சமூகவலைதளங்களில் #JusticeForUwa என்ற டேக்கை டிரண்ட் செய்து அவர் மரணத்துக்கு நீதி கேட்டு போராடி வருகிறார்கள் என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்