எந்தெந்த நாடுகளுக்கு சுற்றுலா சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கிடையாது?: விவரிக்கும் செய்தி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிரித்தானியாவுக்குள் நுழையும் யாரென்றாலும் அவர்கள் கட்டாயம் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

ஜூன் மாதம் 8ஆம் திகதியிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் யாராக இருந்தாலும், அவர்கள் சுற்றுலாப்பயணிகளானாலும் சரி, குடிமக்களானாலும் சரி, இரண்டு வாரங்களுக்கு அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். ஆனால், சில நாடுகள் தங்கள் நாட்டுக்கு வருவோருக்கு தனிமைப்படுத்தல் கிடையாது என்று அறிவித்துள்ளன.

போர்ச்சுகல்

போர்ச்சுகல் பிரதமர் Antonio Costa, Algarve போன்ற இடங்களுக்கு சுற்றுலா வரும் பிரித்தானியர்களுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Madeira போன்ற இடங்களைப் பொருத்தவரை, 72 மணி நேரத்திற்கு முன் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரியவந்திருந்தால், அவர்களுக்கும் தனிமைப்படுத்துதல் இல்லை.

ஸ்பெயின்

தற்போது ஸ்பெயின் இரண்டு வார கட்டாய தனிமைப்படுத்துதலை பின்பற்றும் நிலையில், அது ஜூன் மாதம் 21ஆம் திகதியிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட உள்ளது.அதன் பின் நாட்டுக்குள் வரும் யாரென்றாலும், அவர்களுக்கு இரண்டு வார தனிமைப்படுத்தல் கிடையாது.

இருந்தாலும், இது பிரித்தானியர்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் போக்குவரத்துத்துறை அமைச்சரான Jose Abalos கூறும்போது, தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததற்கு முன்பே விலக்கப்பட்டிருப்பதன் காரணம், அதை ஒரு சோதனை முயற்சியாக பரிசோதித்துப்பார்ப்பதற்காகத்தான்.

ஆகவே, ஜூன் 1 முதல், குறைந்த கொரோனா தொற்றுடைய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள், சோதனை முறையில் நாட்டுக்குள் தனிமைப்படுத்துதல் இன்றி அனுமதிக்கப்பட உள்ளார்கள் என்றார்.

Credit: Reuters

இத்தாலி

இத்தாலி ஜூன் மாதம் 3ஆம் திகதியிலிருந்து தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ள இருக்கிறது. இது பிரித்தானியர்களுக்கும் பொருந்தும்.

இத்தாலிக்குள் நுழையும் யாரும் வாரக்கணக்கில் தனிமைப்படுத்தப்பட தேவையில்லை. ஆனால், இத்தாலிக்கு வருவதற்கு 14 நாட்கள் முன்பு வரை, தாங்கல் தங்கல் சொந்த நாட்டில்தான் இருந்தோம் என்பதை அவர்கள் நிரூபித்துக்காட்டவேண்டும்.

ஐஸ்லாந்து

ஐஸ்லாந்தின் Keflavík விமான நிலையம், நாட்டுக்குள் நுழையும் அனைவருக்கும் ஜூன் 15இலிருந்து இலவசமாக கொரோனா பரிசோதனை செய்ய இருக்கிறது. கொரோனா பரிசோதனையில், கொரோனா தொற்று இல்லை என தெரியவருபவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

தங்களுக்கு கொரோனா இல்லை என சான்றிதழ் மூலமும் சுற்றுலாப்பயணிகள் நிரூபிக்கலாம், ஆனால், அவர்கள் நாட்டில் இருக்கும் வரை ட்ராக்கிங் ஆப் ஒன்றின் மூலம் கண்காணிக்கப்படுவார்கள்.

ஆஸ்திரியா

வியன்னா விமான நிலையம் தரையிரங்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கோள்கிறது.

இதற்கு மூன்று முதல் ஆறு மணி நேரம் வரை ஆகும். இந்த பரிசோதனைக்கு ஆளுக்கு 166 பவுண்டுகள் ஆகும். பரிசோதனை முடிவில் கொரோனா இல்லை என தெரியவந்தால், இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்துதல் தேவை இல்லை.

கொரோனா இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்தால், அந்த நபர் கட்டாயம் இரண்டு வாரங்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

Credit: Alamy

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்