கொரோனாவால் கோமாவுக்கு சென்று உயிர்பிழைத்த குழந்தை: அதிசய நிகழ்வு

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

பிரேசிலில் பிறந்து சில நாட்களேயான குழந்தை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட உணர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.

பிரேசிலில் பிறந்து சில நாட்களேயான டாம் என்ற ஆண் குழந்தை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது.

இதனை புரோ கார்டியாகோ மருத்துவமனை உறுதி செய்தததும், குழந்தையை சிகிச்சைக்காக பெற்றோர்கள் அனுமதித்தனர்.

இதன்பின்னரும் குழந்தையின் நிலை மோசமடைய தொடர்ந்து கோமா நிலைக்கு சென்றது.

32 நாட்கள் கோமாவில் இருந்து குழந்தை, தற்போது தொடர் மருத்துவ சிகிச்சையின் விளையாக உயிர் பிழைத்துள்ளது.

இதுபற்றி குழந்தையின் தந்தையான ஆன்ட்ரேட் கூறுகையில், எங்களுடைய குழந்தைக்கு கொரோனா பரவியது எப்படி என எங்களுக்கு தெரியவில்லை.

அவன் சுவாசிக்க சிரமப்பட்டதை என் மனைவி கண்டறிந்ததும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.

இப்போது தான் மன நிம்மதியாக உள்ளது, என் மகன் பிழைத்தது அதிசயமான ஒன்று தான் என நெகிழ்கிறார் டாமின் தாய்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்