அரசாங்கத்தின் ஊரடங்கு விதிமுறைகள் அரசியலமைப்பிற்கு எதிரானவை: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட சில கொரோனா வைரஸ் ஊரடங்கு விதிமுறைகள் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று தென்னாப்பிரிக்க நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

இறுதிச்சடங்குகள், முறைசாரா தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் இந்த விதிமுறைகளால் பாதிப்புக்கு உள்ளானதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், குறித்த விதிமுறைகளை மாற்ற அரசாங்கத்திற்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

தென்னாப்பிரிக்கா துவக்கத்தில் கடும்போக்கான ஊரடங்கு விதிமுறைகளை அமுலுக்கு கொண்டு வந்தது.

நாட்டில் இதுவரை 35,812 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 755 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

இந்த நிலையிலேயே தன்னார்வ அமைப்புகள், ஊரடங்கு விதிகள் தொடர்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளன.

இதில் விசாரணை முன்னெடுத்த நீதிமன்றம், கடும்போக்கான ஊரடங்கு விதிகளால், தொற்றுநோய் பாதிப்பை கட்டுப்படுத்தவோ அல்லது விகிதத்தை குறைக்கவோ முடியாது என குறிப்பிட்டுள்ளன.

இறுதிச்சடங்குகளுக்கு அனுமதியளிக்கும் அரசாங்கம், அன்றாட உணவுக்கான வகை தேட அனுமதி மறுப்பது விசித்திரமாக உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், விதிமுறைகளை மறுஆய்வு செய்வதாக அரசாங்கம் கூறியது, இருப்பினும் தற்போதைய ஊரடங்கு விதிமுறைகள் தொடரும் என்றே அறிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்