எங்கள் உள்நாட்டு விவகாரம்... தேவையின்றி குறுக்கீடு வேண்டாம்: பிரித்தானியாவை கடுமையாக எச்சரித்த சீனா

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஹொங்ஹொங்குக்கான புதிய பாதுகாப்பு விதிகளுக்கு பிரித்தானியாவின் எதிர்ப்பு கண்மூடித்தனமானது மட்டுமின்றி உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு ஒப்பானதாகும் என சீனா கடுமையாக எச்சரித்துள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் பிரித்தானியாவின் இந்த கருத்துக்கு எதிராக இன்று கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

பிரித்தானியாவின் இந்த போக்கு கண்டிப்பாக பின்னடைவை சந்திக்கும் எனவும் சீன வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஹொங்ஹொங்கின் மனித உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபடும் என்றால், அங்குள்ள 3 மில்லியன் மக்களுக்கு குடியுரிமை வழங்கவும் பிரித்தானியா தயாராக இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்ததை அடுத்தே சீனா வெளிவிவகார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரம் சீனாவின் பாராளுமன்றம் ஹொங்ஹொங்குக்கான புதிய திருத்தப்பட்ட பாதுகாப்பு சட்டத்தை அங்கீகரித்துள்ளதை பல்வேறு தரப்பில் இருந்து விமர்சிக்கப்பட்டது.

திருத்தப்பட்ட புதிய சட்டத்தின்படி, சீனாவின் பாதுகாப்பு துறை மற்றும் உளவு அமைப்புகள் தங்களுக்கான புதிய கிளை அலுவலகத்தை ஹொங்ஹொங்கில் முதன்முறையாக திறக்கலாம்.

இந்த நடவடிக்கையானது ஹொங்ஹொங்கின் சுதந்திரத்தை பறிக்கும் என்றும் இரகசிய பொலிஸ், தன்னிச்சையான தடுப்புக்காவல்கள், கண்காணிப்பு மற்றும் பிராந்தியத்தில் இணைய கட்டுப்பாட்டைக் கூட பரவலாக அமுலுக்கு கொண்டுவர வழிவகுக்கும் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கடும்போக்கான இந்த சட்டத்தில் இருந்து சீனா கண்டிப்பாக பின்வாங்க வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையிலேயே, இது தங்களின் உள்நாட்டு விவகாரம் எனவும், கண்மூடித்தனமாக நடவடிக்கைகள் பிரித்தானியாவுக்கு பின்னடைவை தரும் என சீனா வெளிவிவகார அமைச்சகம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்