பற்றி எரியும் அமெரிக்கா.. பொலிசாருக்கு ஜனாதிபதி டிரம்ப் நன்றி

Report Print Basu in ஏனைய நாடுகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று இரவு வாஷிங்டன் டி.சி.யில் நடந்த போராட்டங்கள் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்காவில் ஜோர்ஸ் பிளாய்ட் பொலிசாரால் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் மட்டுமின்றி உலக முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்பார்த்ததை விட வாஷிங்டன் டி.சி.யில் மிகக் குறைந்த கூட்டம். தேசிய காவலர், ரகசிய சேவை மற்றும் டி.சி காவல்துறை அருமையாக பணியாற்றி வருகின்றன. நன்றி! என டிரம்ப் ட்வீட் செய்தார்.

இந்நிலையில், டி.சி.யில் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் போராடத்தில் ஈடுபட்டனர், இது பிளாய்ட் இறந்ததிலிருந்து நகரத்தில் நடந்த மிகப்பெரிய போராட்டமாக தோன்றுகிறது என்று சி.என்.என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காவல்துறையினருடன் மோதல்கள் எதுவும் ஏற்படாத நிலையில், நாள் முழுவதும் போராட்டம் அமைதியாக இருந்தன.

போராட்டங்களின் மிகவும் அமைதியான தன்மையை பிரதிபலிக்கும் வகையில், இன்றிரவு ஊரடங்கு உத்தரவு இல்லை என சி.என்.என் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்