விரைவில் கொரோனாவுக்கு தடுப்பூசி: ஜேர்மன் ஆய்வாளர்கள் தகவல்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு விரைவில் தடுப்பூசி தயாராகிவிடும் என ஆய்வாளர்கள் கூறியதாக ஜேர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக நாடுகளையே ஆட்டம் காண வைத்துள்ளது கொரோனா வைரஸ், பல நாடுகளிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுக்கடங்காமல் பரவி வரும் இந்த நோய்க்கு, தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றது.

இதில் ஜேர்மனை சேர்ந்த க்யூர்வேக் என்ற நிறுவனமும் ஒன்றாகும், இது பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனம் ஆகும்.

டியுபிங்கன் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பீட்டர் கிரம்ஸ்னர் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறது.

இந்த தடுப்பூசி உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதை முதலில் பரிசோதித்து பார்ப்பதற்காக, ஜேர்மன் மற்றும் பெல்ஜியத்தில் மொத்தம் 144 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் 2 மாதங்களில் பரிசோதனை நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும் என பீட்டர் கிரம்ஸ்னர் கூறியதாக ஜேர்மன் நாட்டு பத்திரிக்கைகள் தகவல் வெளியிட்டுள்ளன.

2021ம் ஆண்டு மத்தியில் இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்