இந்த காரணத்துக்காக பெண்கள் கருவுறுதலை தள்ளிப்போட வேண்டும்! வேண்டுகோள் விடுத்துள்ள நாடு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கர்ப்பிணிப் பெண்களை கொரோனா எளிதில் தாக்கக்கூடும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறி வருகிற நிலையில், எகிப்து பெண்கள் கருவுறுதலை தள்ளிப்போட அந்நாட்டு அரசு கோரியுள்ளது.

கருவுற்றிருக்கும் சமயத்தில் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி சில காரணங்களால் சற்று குறையக்கூடும்.

அதன் காரணமாக கொரோனா தொற்றுக்கு அவர்கள் எளிய இலக்காக மாறக்கூடும் என்பதால் தற்சமயம் கருவுறுதலைப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக எகிப்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தி கருவுறுதலைப் பெண்கள் தற்காலிகமாகத் தள்ளிவைக்க வேண்டும்.

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு நடைப்பயிற்சி மிகச் சிறந்த உடற்பயிற்சி. ஆனால், தற்போதைய கொரோனா காலகட்டத்தில் கர்ப்பணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளிவருது ஆபத்தாக முடியும். எனவே வீட்டுக்குள்ளே அவர்கள் தொடர்ந்து இயக்கத்தில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்