'பாதுகாப்பான' பயணப் பட்டியலிலிருந்து அமெரிக்கா நீக்கம்! ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளிப்புற எல்லைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய ஆணையம், செவ்வாயன்று அதன் எல்லைகளுக்கு அப்பால் 14 நாடுகளில் இருந்து ஓய்வு அல்லது வணிக பயணங்கள் மேற்கொள்ள ஒப்புதல் அளித்தது.

அல்ஜீரியா, அவுஸ்திரேலியா, கனடா, ஜார்ஜியா, ஜப்பான், மாண்டினீக்ரோ, மொராக்கோ, நியூசிலாந்து, ருவாண்டா, செர்பியா, தென் கொரியா, தாய்லாந்து, துனிசியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளிலிருந்து ஓய்வு அல்லது வணிக பயணங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்தது.

குறிப்பாக தெற்கு ஐரோப்பாவின் நாடுகள் COVID-19 தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றிய பயணத் தொழில் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது,

ஐரோப்பிய ஒன்றியத்தை விட அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனவே குறிப்பிட்ட நாடுகள் அனுமதி ஒப்புதலுக்காக குறைந்தது இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்