திடீரென சரிந்த சுரங்கம்.. நூற்றுக்கணக்கானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்த கோரம் ! பலி எண்ணிக்கை 162 அதிகரிப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

வடக்கு மியான்மரில் உள்ள ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 162 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை சுரங்கக் கழிவுகளின் குவியல் திடீரென ஏரியில் சரிந்து பல தொழிலாளர்களை மண் மற்றும் தண்ணீருக்கு அடியில் புதைந்தனர்.

வியாழக்கிழமை மாலை, மீட்புப் பணியாளர்கள் 162 சடலங்களை மீட்டுள்ளதாக தீயணைப்பு சேவைத் துறை தெரிவித்துள்ளது, ஆனால் தேடுதல் தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று சகதியுடன் பெருவெள்ளம் உள்ளே புகுந்ததாகவும், உள்ளூர் நேரப்படி பகல் 6.30 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்