தாயாக ஆசைப்பட்ட இளம்பெண்... இரட்டைக் குழந்தைகள் பெற்றும் கொரோனா வடிவில் விளையாடிய விதி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தாயாகவேண்டும் என ஆசைப்பட்ட நிலையில், அவர் விருப்பம் போலவே இரட்டைக் குழந்தைகள் பிறந்தன அவருக்கு.

ஆனால், இந்த பாழாய்ப்போன கொரோனா, அழகு தேவதைகள் போல் அவர் பெற்றெடுத்த இரட்டைக் குழந்தைகளுடன் வாழ விடாமல் அவரது உயிரைப் பறித்துவிட்டது.

கடுமையான ப்ளூ போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட Larissa Blanco என்ற நிறைமாத கர்ப்பிணியான அந்த இளம்பெண்ணுக்கு ஜூன் மாதம் 12ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அடுத்த நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Larissaவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

அவர் Guilherme மற்றும் Gustavo என்னும் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

இரண்டாவது குழந்தை பிறந்ததும் அதற்கு சில சிறு பிரச்சினைகள் இருந்ததால், தனது குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக குழந்தைகள் வார்டுக்கு சென்றார் அவரது கணவரான Diego Rodrigues (24).

அவர் சென்று சிறிது நேரத்திற்குள் ஓடோடி வந்த மருத்துவர்கள், Larissaவுக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அவரால் தாக்குப்பிடிப்பது கடினம் என்றும் Diegoவிடம் கூறியுள்ளனர்.

மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் அவர்களால் Larissaவைக் காப்பாற்ற முடியவில்லை. மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோனார் Larissa.

கொரோனா பாதித்ததால் Larissaவின் உடலால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை என்று கூறியுள்ளார்கள் மருத்துவர்கள்.

எனக்கு மன வலிமையைக் கொடுப்பதற்காக, நான் பார்த்துக்கொள்வதற்காக இரண்டு குட்டி தேவதைகளைக் கொடுத்துவிட்டு அவளை அழைத்துக்கொண்டார் கடவுள் என கண்ணீர் விடும் Diego, குழந்தைகளை கவனித்துக்கொண்டு மருத்துவமனையில் தங்கியுள்ளார்.

பிரேசிலில் 60,000 பேருக்கு அதிகமானவர்களை பலி கொண்ட கொரோனா, கொஞ்சமும் ஈவிரக்கமின்றி இளம்தாய் Larissaவையும் பலிவாங்கிவிட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்