7 வாரங்கள்.. 3200கி.மீ சைக்கிள் பயணம்: ஊரடங்கை வென்று குடியிருப்புக்கு திரும்பிய இளைஞர்!

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
130Shares

கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர் ஒருவர் 3200கிமீ சைக்கிளில் பயணம் செய்து தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் போக்குவரத்து எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து இல்லாததால் பலரும் ஆங்காங்கே சிக்கிக் கொண்டு சொந்த ஊருக்குப் போக முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்கொட்லாந்தில் படித்து வந்த மாணவர் ஒருவர் சைக்கிளில் 3200கிமீ பயணம் செய்து தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

க்ளியான் என்ற அந்த மாணவர் ஸ்கொட்லாந்தின் அபர்தீன் பகுதியில் கல்லூரி படித்துக்கொண்டுள்ளார்.

அவரது வீடு க்ரீசில் உள்ள ஏதென்சில் அமைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாகக் கல்லூரியில் சிக்கிக்கொண்ட க்ளியான் கிட்டத்தட்ட 3218கிமீ தூரத்தில் உள்ள தன்னுடைய சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

போக்குவரத்து ஏதும் இல்லாத நிலையில் சைக்கிளை எடுத்துள்ளார் அந்த மாணவர்.

தங்குவதற்குத் தற்காலிக கூடாரம், பிரட் பாக்கெட்டுகள், வெண்ணெய் எனப் பயணத்திற்கு தேவையான அனைத்தையும் உடன் எடுத்துக்கொண்டு பயணப்பட்டுள்ளார் மாணவர் க்ளியான்.

சாகச பயணங்களில் ஆர்வம் உடைய மாணவரான க்ளியான் , கிட்டத்தட்ட 7 வாரங்கள் பயணங்களுக்குப் பிறகு தன்னுடைய குடியிருப்பை அடைந்துள்ளார்.

சாலையில் பல இடர்பாடுகள் இருந்ததால் சைக்கிள் டயர் அடிக்கடி பஞ்சர் ஆனதாகவும், இது ஒரு தனித்துவமான பயணம் என்றும் க்ளியான் தெரிவித்துள்ளார்.

அனைத்தும் சரியான பிறகு மீண்டும் விமானத்தில் பறந்தே கல்லூரிக்குச் செல்ல வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்