ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்ல பிரித்தானியர்கள் தயாரான நேரத்தில் வந்த ஏமாற்றமளிக்கும் செய்தி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்லலாம் என பிரித்தானியர்கள் பலர் தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில், ஸ்பெயின் நாட்டின் 400,000க்கும் அதிகமானோர் வாழும் பகுதி ஒன்று கொரோனா பரவல் காரணமாக மூடப்படுகிறது என்ற செய்தி வந்துள்ளது.

ஸ்பெயினிலுள்ள காட்டலோனியா பகுதியில் அமைந்துள்ள Lleida என்னும் நகரம் மற்றும் மீதமுள்ள Segrià ஆகிய பகுதிகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதையடுத்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று மதியம் முதல் அந்த பகுதிகள் மீண்டும் முடக்கப்பட உள்ளதால் சுற்றுலா செல்லும் ஆசையிலிருந்த பிரித்தானியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திடீரென கொரோனா தொற்று பயங்கரமாக அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து இந்த பகுதிகளை முடக்க முடிவு செய்ததாக காட்டலோனியா அதிபர் Quim Torra கூறினார்.

குறிப்பிட்ட பகுதிகளுக்கு யாரும் செல்லவும், அங்கிருந்து யாரும் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Segrià பகுதியைச் சேர்ந்த யாராவது விடுமுறைக்கோ அல்லது வேறெங்காவதோ சென்றிருந்தால், 4 மணிக்குள் வீடு திரும்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள், அப்படி அவர்கள் திரும்பாவிட்டால் பிறகு இப்போதைக்கு தங்கள் வீடுகளுக்கு அவர்கள் திரும்ப முடியாது.

வெளியிடங்களுக்கு வேலை நிமித்தம் சென்றுள்ளோருக்கு மட்டும் இந்த கட்டுப்பாட்டிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்