10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறிய 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் 10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறி அதிரவைத்த 13 வயது சிறுமிக்கு குறைப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ivan (10) என்ற சிறுவனும், Darya (13) என்ற சிறுமியும் காதலித்த நிலையில் Darya கர்ப்பமானதாக தெரிவித்தார்.

Ivan தான் தனது வயிற்றில் உள்ள குழந்தைக்கு தந்தை என Darya கூறிய நிலையில் உலகம் முழுவதும் இந்த ஜோடி வைரலானது.

இந்த நிலையில் அதிரடி திருப்பமாக தனது வயிற்றில் வளரும் குழந்தையின் உண்மையான தந்தை குண்டாகவும், உயரமாகவும் இருப்பவர் எனவும் அவருக்கு குறைந்தது 16 வயது இருக்கும் எனவும் Darya கடந்த மே மாதம் கூறினார்.

தன்னை அந்த நபர் துஷ்பிரயோகம் செய்ததாலேயே கர்ப்பமானதாகவும் கூறினார்.

இது குறித்து பொலிசாருக்கு முழுமையான விளக்கத்துடன் புகார் கொடுத்துவிட்டேன், அவர்கள் இது தொடர்பில் விசாரிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது 14 வயதாகும் Daryaவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பரில் தான் பிரசவம் நடக்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது குறைப்பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்துள்ளார் Darya.

121,000 பாலோவர்ஸ் கொண்ட அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு Darya தன் மீது குழந்தையை சாய்த்து வைத்திருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில் அவசரமாக பிரசவ வலியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட Darya-வுக்கு குறைப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குழந்தை பிறந்த பின்னர் அதன் டி.என்.ஏ மூலம் அதன் தந்தை யார் என தெரியவரும் என Darya கூறியிருந்த நிலையில் அது குறித்த உண்மை விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது எனக்கு குழந்தை பிறந்த பின்னர் அதன் டி.என்.ஏவை வைத்து என்னை துஷ்பிரயோகம் செய்த நபருடன் பரிசோதனை நடக்கும், பின்னர் அவர் மீது நடவடிக்கை பாயும் என கூறியிருந்தார் Darya.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்