நடுக்கடலில் தாக்கி அழிக்கப்பட்ட படகுகள்..! இராணுவம் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஏமனில் ஹவுத்தி குழுவுடன் சண்டையிடும் சவுதி தலைமையிலான இராணுவ கூட்டுப்படை செங்கடலில் வெடிப்பொருட்கள் நிறைந்த இரண்டு படகுகளை அழித்ததாக சவுதி அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

தொலைதூரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட இரண்டு படகுகள் அவ்வழியாக செல்லும் கப்பல்களை அச்சுறுத்துவதாக சவுதி தலைமையிலான இராணுவ கூட்டுப்படை தெரிவித்துள்ளது.

ஏமன் துறைமுகமான சலீப்பின் தெற்கே படகுகள் அழிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தலைநகர் சனாவிலிருந்து சவுதி ஆதரவுடைய சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்தை ஹவுத்திகள் வெளியேற்றிய பின்னர் சவுதி தலைமையிலான இராணுவ கூட்டுப்படை 2015 மார்ச் மாதம் ஏமன் உள்நாட்டு பிரச்சனையில் தலையிட்டது.

இந்த மோதல்கள் பெரும்பாலும் இப்பகுதியில் சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மறைமுக போராகவே காணப்படுகின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்