வேறொரு ஆண்களுடன் மனைவி... வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த கணவன்! அதன் பின் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் மனைவி வேறோரு நபர்களுடன் இருப்பதைக் கண்டு ஆத்திரத்தில் கணவன் மனைவியை கண்மூடித்தனமாக அடிக்கும் காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

சீனாவின் Hebei மாகாணத்தின் Baoding நகரில் இருக்கும் உணவகம் ஒன்றில் கடந்த 2-ஆம் திகதி குறித்த சம்பவம் நடந்ததாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதில், உணவகத்திற்குள் நுழையும் ஆண் ஒருவர், திடீரென்று இரண்டு ஆண்களுடன் மேஜையில் அமர்ந்திருக்கும் பெண் ஒருவரை தாக்குகிறார்.

இதனால் அந்த அப்படியே கீழே விழுகிறார். அதன் பின் அருகில் இருக்கும் நபரையும் அங்கிருக்கும் பொருட்களை எடுத்து கண்மூடித்தனமாக தாக்குகிறார்.

இதைக் கண்டதும் அங்கிருக்கும் ஊழியர் ஒருவர் அப்படியே மெதுவாக பின்னே செல்கிறார். இருப்பினும் ஆத்திரம் தாங்காமல் தாக்கும் கணவர், இது என் மனைவி என்று கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு மேஜையில் இருக்கும் நபர் தெரியும், தயவு செய்து பொறுமையாக இருங்கள், காத்திருங்கள் என்று கூறுகிறார். அதற்கு கணவர் நான் 20 நிமிடங்களுக்கு மேலாக வெளியே நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஆமாம் நீங்கள் யார் என்று ஒரு வித ஆக்ரோஷத்துடனே கேட்கிறார்.

இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் 9 மணிக்கு உணவகத்திற்குள் நுழைந்து பிரச்சனையை சமாதானப்படுத்தி, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக மனைவி மற்றும் இரண்டு ஆண்களும் காயமடைந்துள்ளனர்.

பொலிசார் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று வரை இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தொடர் விசாரணைக்கு பின்னரே, அந்த இரண்டு பேர் யார்? இவர்களுடன் குறித்த பெண் உணவகத்திற்கு வந்த காரணம் தெரியவரும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்