விபச்சாரியை நாடியதாக குற்றச்சாட்டு: சீன ஜனாதிபதியின் கடும் விமர்சகருக்கு ஏற்பட்ட துயரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
8374Shares

சீனா ஆளும் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக கடு விமர்சனம் முன்வைத்ததன் பேரில் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்துறை பேராசிரியரை பொலிசார் விடுவித்துள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்திருந்த நிலையிலேயே Xu Zhangrun என்ற பேராசிரியரை சீனத்து நிர்வாகம் விடுதலை செய்துள்ளது.

ஆறு நாட்கள் சட்டவிரோதமாக சிறை வைத்திருந்ததன் பின்னரே பேராசிரியர் ஷ்யூ விடுவிக்கப்பட்டார்.

கடந்த திங்களன்று கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஷ்யூ ஞாயிறன்று பகல் குடியிருப்புக்கு திரும்பியதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கடந்த ஆறு நாட்களில் என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளிவரக் கூடாது என கடும் எச்சரிக்கைக்கு பின்னரே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

குடியிருப்புக்கு திரும்பிய பின்னரும் பொலிசாரின் கண்காணிப்பு தொடர வாய்ப்புள்ளதாக நண்பர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

57 வயதான பேராசிரியர் ஷ்யூ 2018 ஆம் ஆண்டில் முதன் முறையாக சீன அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஒரு தலைவருக்கு இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக பொறுப்பேற்க முடியும் என்ற சட்டத்தை நீக்கிய ஷி சிங்பிங் நிர்வாகம் மீது அவர் விமர்சனம் முன்வைத்தார்.

குறித்த சட்டத்தை நீக்கியதாலையே, ஷி சின்பிங் தற்போதும் ஜனாதிபதியாக தொடர்கிறார்.

2018-ல் எழுதி வெளியிட்ட கட்டுரைக்கு பின்னர் சீன ஆளும் கட்சிக்கு எதிராக தொடர் விமர்சனங்களை முன்வைத்து வந்தார் ஷ்யூ

பிப்ரவரி மாதம் நாட்டில் கொரோனா பரவல் ஏற்பட்ட நிலையில், கருத்து சுதந்திரம் மக்களின் உரிமை என்ற அவரது கட்டுரை பலரது கவனத்தை ஈர்த்தது.

கொரோனா பெருந்தொற்று உருவான விதம், சீனா நாட்டு மக்களுக்கு பதில் கூற வேண்டும் எனவும், உரிய விசாரணை முன்னெடுக்கவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், ஜூலை 13 ஆம் திகதி பகல் பேராசிரியர் ஷ்யூவின் குடியிருப்புக்குள் புகுந்த சுமார் 20 பொலிசார், அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

குடியிருப்பு முழுவதும் சல்லடையிட்டு தேடிய பொலிசார், அவரது கணினியையை கைப்பற்றினர்.

சங்தூ பகுதியில் விபச்சாரி ஒருவரின் சேவையை நாடியதாக குற்றச்சாட்டப்பட்ட ஷ்யூ, கை விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் பேராசிரியரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சீன நிர்வாகத்தின் சதி இதுவென அவரது நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசை விமர்சித்ததற்காக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்படுவது கவலை அளிப்பதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியிருந்தது.

நாட்டின் பல்கலைக்கழகங்களில், அரசு தங்களது கொள்கைகளை திணிப்பதாகவும், கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்கா,

கருத்து சுதந்திரத்தை கருத்தில் கொண்டு பேராசிரியர் ஷ்யூவை விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை வைத்தது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்