300-க்கும் மேற்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்த கொடூரன் மரணம்! சிறையில் நடந்தது என்ன?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
541Shares

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற நபர் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்த குற்றத்திற்காக மரணதண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று அதிகாரிகள் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம் 65 வயது மதிக்கத்தக்க பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற Francois Camille Abello என்ற நபரை பொலிசார் கைது செய்தனர். அவருடைய அறையில் இருந்த இரண்டு சிறுமிகளையும் மீட்டனர்

இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபர் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்ததாகவும், அவருடன் நெருக்கமாக இருக்க மறுத்தவர்களை அடித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

இதன் காரணமாக அவர் மரணதண்டனை எதிர்கொள்ள நேரிடம் என்று அதிகாரிகள் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தனர்.

கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் இருந்து பாலியல் மருந்துகள், பாலியல் கருவிகள், ஆணுறைகள், ஆறு கமெராக்கள், ஒரு பாஸ்போர்ட், ஒரு மடிக்கணினி, குழந்தைகள் அணியும் அளவிற்கு 21 கவர்ச்சியான உடைகளை பொலிசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன் படி அவர் கழுத்தில் கேபிள் ஒன்றை அழுத்தி பிடித்து, மூச்சுத் திணறி உயிரிழக்கும் வகையில் முயன்றுள்ளார்.

இதையடுத்து, அதிகாரிகள் அவரை ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு உயிரிழந்துள்ளார்.

இதை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்