1,500 படுகொலை.. அரசாங்கத்தை எதிர்த்து போராடியவர்களுக்கு மரண தண்டனை உறுதி! வெளிச்சத்திற்கு வந்த ஈரானின் அட்டூழியம்

Report Print Basu in ஏனைய நாடுகள்
102Shares

ஈரானில் கடந்தாண்டு நவம்பரில் நாட்டின் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று ஈரானிய போராட்டகார்களின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.

கடந்தாண்டு நவம்பரில் ஈரான் முழுவதும் பெட்ரோல் ரேஷன் மற்றும் விலை உயர்வுகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து ஏற்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து மொராடி, தம்ஜிடி மற்றும் ராஜாபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர் மற்றும் சுமார் 1,500 ஈரானியர்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.

ஜூன் மாதம் ஈரான் உச்ச நீதிமன்றம் மூன்று போராட்டகார்களான அமிரோசொயின் மொராடி, சயீத் தம்ஜிடி மற்றும் முகமது ராஜாபி ஆகியோரின் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது என ஈரானிய உரிமைகள் குழு HRANA தெரிவித்துள்ளது.

மூன்று போராட்டக்காரர்களும் சித்திரவதை மூலம் அவர்கள் செய்யாத குற்றங்களை ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக HRANA தெரிவித்துள்ளது.

மூன்று பேரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியதாக நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலாம்ஹோசின் எஸ்மெய்லி உறுதிப்படுத்தினார்.

அவர்கள் தொலைபேசிகளில் வீடியோக்களை வைத்திருந்தனர், அதில் அவர்கள் வங்கிகள் மற்றும் பேருந்துகளுக்கு தீ வைத்தனர் என எஸ்மெய்லி கூறினார்.

english.alarabiya.net

அவர்கள் தங்கள் குற்றச் செயல்களை படமாக்கி சில வெளிநாட்டு செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பினர் என்று அவர் கூறினார்.

அவர்கள் கலவரத்தின் போது குற்றங்களைச் செய்த குண்டர்கள் என்று எஸ்மெய்லி மேலும் கூறினார்.

ஈரான் பெரும்பாலும் நாட்டில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கலவரங்கள் என்றும் போராட்டகாரர்களை குண்டர்கள் என்றும் வெளிநாட்டு இணைந்த முகவர்கள் என்றும் விவரிக்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்