பிணவறையில் வைக்கப்பட்ட இறந்த தந்தையின் உடல்! அங்கு சென்று பார்த்த மகளுக்கு தெரிந்த உண்மை.. நம்பமுடியாத சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கொலம்பியாவில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்ட தந்தைக்கு இன்னும் உயிர் இருப்பதாக அவரின் மகள் கண்டுபிடித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Sincelejo நகரை சேர்ந்தவர் Jose Munoz Romero (67). இவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு குடும்பத்தார் கொண்டு சென்றனர்.

அங்கு சென்ற இரண்டு மணி நேரம் கழித்து Jose Munoz Romero உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதோடு அவரின் சடலத்தை பிணவறைக்குள் வைத்தார்கள்.

ஆனால் Jose Munoz Romero உயிரிழந்ததை அவர் குடும்பத்தார் நம்பாமல் அவரை பார்க்க வேண்டும் என மருத்துவர்களிடம் சண்டை போட்டனர். மேலும் பிணவறைக்குள் செல்ல வேண்டும் என அடம்பிடித்தனர்.

இதற்கு மருத்துவர்கள் ஒப்பு கொள்ளாத போதிலும் Jose Munoz Romero-ன் மகள் பிணவறைக்குள் சென்று தந்தையை பார்த்தார்.

அப்போது Jose Munoz Romero மூச்சு விடுவதையும், உயிருடன் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவர்களிடம் கூறினார்.

ஆனால் அதை நம்பாத மருத்துவர்கள் மரணத்திற்குப் பிறகு நோயாளிகளில் காணப்படும் இயற்கையான எதிர்வினைகள் தான் அது என கூறினார்கள்.

பின்னர் Jose Munoz Romeroவின் மகன் மற்றும் மகள் சேர்ந்து அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் உயிருடன் இருந்த நபர் இறந்துவிட்டதாக கூறிய மருத்துவமனை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க குடும்பத்தார் முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்