கொரோனா பெருந்தொற்றை அடுத்து சீனாவை மூழ்கடிக்கும் பெருவெள்ளம்: வுஹானில் சிவப்பு எச்சரிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
265Shares

சீனாவின் தெற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களைத் தொடர்ந்து தற்போது கிழக்கு பிராந்தியங்களிலும் பெருவெள்ளம் தற்போது பேரழிவை விதைத்து வருகிறது.

சீனாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் கொண்ட பகுதிகள் அனைத்தும் தற்போது பெருவெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

உத்தியோகப்பூர்வ தகவலின்படி இதுவரை 140-கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளனர் அல்லது இறந்துள்ளனர்.

பெருவெள்ளத்தால் சுமார் 3.7 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 28,000 குடியிருப்புகள் மொத்தமாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவால் சீரழிந்த ஹூபே மாகாணம் உள்ளிட்ட 27 பிராந்தியங்கள் தற்போது பெருவெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கொரோனா உருவானதாக கூறப்படும் வுஹான் நகரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஆசியாவின் மிகவும் நீளம் கொண்ட நதியான யாங்ஸி கரைபுரண்டதால் ஏற்பட்ட பொயாங் ஏரியில் நீர் மட்டம் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்,

வுஹான் நகருக்கு சுமார் 368 கி.மீற்றர் தொலைவில் உள்ள 3 பெரிய அணைகள் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இன்றி திறந்ததாலையே, பொயாங் ஏரியில் நீர் மட்டம் ஆபத்தான நிலைக்கு உயர காரணம் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அணைகளில் இருந்து தண்னீர் திறக்கப்பட்டதும் யாங்ஸி நதிக்கு சமீப பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளது. மேலும், மழை தொடர்ந்து பெய்து வருவதால் வுஹான் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் 98 நதிகளின் சமீப பிரதேசங்கள் நீருக்குள் மூழ்கியதை அடுத்து 3 ஆம் எண் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வுஹான் உட்பட்ட ஹூபே மாகாணத்தில் எச்சரிக்கை எண் 2-ல் இருந்து, அதி முக்கிய எச்சரிக்கை எண் 1 அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

1961 ஆம் ஆண்டுக்கு பிறகு சீனாவில் பேரழைவை ஏற்படுத்தும் மழை இதுவென கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு முதற்கட்ட ஆய்வை வுஹானில் முன்னெடுக்க இருந்த நிலையிலேயே, தற்போது பெருவெள்ளத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் வுஹான் நகரத்தின் அருகாமையில் உள்ள பெரும் அணைகளில் இருந்து, பல ஆயிரம் கன அடி தண்ணீரை வேண்டும் என்றே வுஹான் பகுதிக்கு திருப்பி விட்டு,

செயற்கையான பெருவெள்ளத்தை சீனா ஏற்படுத்தியிருக்கலாம் எனவும், இதனால் கொரோனா தொடர்பிலான விசாரணையை முடக்க சீனா திட்டமிட்டிருக்கலாம் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்