இளம்பெண்ணை கடத்தி பையில் அடைத்து காட்டுக்கு கொண்டு சென்ற முன்னாள் கணவன்: பின்னர் செய்த செயல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
608Shares

பொறாமை பிடித்த நபர் ஒருவர் தனது முன்னாள் மனைவியை கட்டி பையில் அடித்து காட்டுக்குள் தூக்கிச் சென்றுள்ளார்.

ரஷ்யாவில் Yaroslav Fokin (35) என்ற நபர் தனது முன்னாள் மனைவியான Elena Rukhlyada (34) வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

வீட்டுக்குள் இருந்த Elenaவையும் அவரது தோழியையும் கத்தி முனையில் கட்டிப்போட்ட Yaroslav, Elenaவை ஒரு ஹாக்கி பைக்குள் அழைத்துள்ளார். Yaroslav அந்த பையை இழுத்துக்கொண்டு சென்று காரில் ஏற்றும் காட்சிகள் CCTVகமெராவில் சிக்கியுள்ளன.

காரில் நதி ஒன்றிற்கு சென்ற Yaroslav, அங்கு தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகும் ஒன்றில் Elenaவை ஏற்றிக்கொண்டு காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளார்.

தன்னை Yaroslav எப்படியும் கொன்று விடுவார் என்று பயந்துபோய் இருந்திருக்கிறார் Elena, காரணம் சில நாட்கள் முன்புதான், உன்னை மெதுவாக கொல்வேன் என்று மிரட்டல் விடுத்திருந்தார் அவர்.

ஆனால் காட்டுக்குள் சென்று பையைத் திறந்து Elenaவை வெளியே கொண்டு வந்து அவரது கட்டுக்களை அவிழ்த்த Yaroslav, அவருக்கு ரொமாண்டிக்காக பூங்கொத்து ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதற்குள் தகவலறிந்து Yaroslavஐ பின் தொடர்ந்த பொலிசார் அங்கு வர, அங்கிருந்து ஓட முயன்றிருக்கிறார் அவர்.

தற்போது Yaroslavக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், Yaroslav சிறையிலிருந்து வெளியே வந்தால் தன் நிலை என்ன ஆகும் என பயந்திருக்கிறார் Elena.

Elena வெள்ளிப்பதக்கம் பெற்ற பிரபல தடகள வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை காண

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்