மகப்பேறு மருத்துவமனையில் ஒரே இரவில் ஏழு பச்சிளம் குழந்தைகள் பலி..! மருத்துவர்கள் கூறிய காரணம்

Report Print Basu in ஏனைய நாடுகள்
117Shares

ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் கூட்ட நெரிசல் காரணமாக ஒரே இரவில் ஏழு குழந்தைகள் இறந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா தொடர்பான பணியாளர்கள் பிரச்சினையே குழந்தைகள் இறப்பிற்கு காணரம் என கூறப்படுகிறது.

மகப்பேறு வார்டில் பணியாற்றும் இரண்டு மருத்துவர்கள், குழந்தைகள் உயிரிழந்தை உறுதிப்படுத்தினர்.

திங்களன்று சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைகள் மகப்பேறு வார்டுகளில கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

சிதைந்த கருப்பை பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் பல நாட்கள் கவனிக்கப்படாமல் இருந்ததால் அவர்களின் குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

குறித்த மருத்துவமனையில் செவிலியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாகவும், மருந்து மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மிகக் குறைவாக விநியோகப்பட்டுள்ளன, மேலும் மருத்துவர்கள் பணிச்சுமையால் சிரமப்படுவதாக கூறப்படுகிறது.

கொரோனா பற்றிய கவலைகள், பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை, பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஹராரேவில் பல சிறிய மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்களை நகரத்தின் பெரிய அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயில் சுமார் 2,800 கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் 40 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்