வடகொரியாவில் மிக கொடூரமான சட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்த கிம் ஜாங்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறும் மக்களை குறிவைத்து அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உன் ஒரு கொடூரமான புதிய சட்டத்தை விதித்துள்ளார்.

வடகொரியாவில் வசிக்கும் அல்லது எல்லையோர பிராந்தியங்களுக்கு பயணிக்கும் குடிமக்கள், "ஒருபோதும் நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்பதை உறுதிப்படுத்தும் உறுதிமொழியில் கையெழுத்திட நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வடகொரிய எல்லையில் அமைந்துள்ள சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிக்கும் மக்களின் விரல் அடையாளங்களை பதிந்து கொள்ள வேண்டும், மட்டுமின்றி அரசு கோரும் ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கவும் நிர்பந்திக்கப்படுகின்றனர்.

இந்த மாத துவக்கத்தில் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட இச்சட்டமானது வணிகத்தில் ஈடுபடும் மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிரடியான புதிய விதிகளால் இனி எவரும் நாட்டைவிட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வடகொரிய இளைஞர் ஒருவர் வானொலி செய்தி ஒன்றில் பதிவு செய்துள்ளார்.

பயண அனுமதி பெற விரல் ரேகைகள் பதிவு செய்து கொள்வது ஒன்றும் சிக்கலான விடயம் அல்ல என கூறும் சிலர்,

ஆனால் அரசு புதிதாக சமர்ப்பிக்க கோரும் ஆவணங்களின் பட்டியலானது, உண்மையில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் என்கின்றனர்.

சமீப நாட்களில் தென் கொரிய உளவு அமைப்பினர், வடகொரிய எல்லையில் அரசுக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட துண்டுப்பிரசுரங்களை வீசிவிட்டுச் செல்வது வாடிக்கையாக நடைபெறுகிறது.

இதுவே, கிம் ஜாங் அரசை புதிய கொடூர சட்டங்களை அமுலுக்கு கொண்டுவர காரணமாக அமைந்துள்ளது.

கிம் ஜாங் நிர்வாகத்தின் புதிய சட்டத்தால் சில குடிமக்கள் முக்கியமான குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்க முடியாமல் போவதாகவும், உரிய நேரத்தில் அவர்களால் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாமல் போவதே காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த மாத துவக்கத்தில் சுமார் 30 குடும்பங்கள், பல்வேறு குடும்ப நிகழ்வுகளுக்கு செல்வதாக கூறி வடகொரியாவை விட்டு வெளியேறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்