கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..! உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ரஷ்யா

Report Print Basu in ஏனைய நாடுகள்
1848Shares

ரஷ்யாவில் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட தயாராகி வருவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் உள்ள அரசு ஆராய்ச்சி மையமான கமலேயா நிறுவனம் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டதாகவும், அதை பதிவு செய்ய தயாராகி வருவதாக சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார்.

டாக்டர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதலில் தடுப்பூசி போடப்படும் என்று அவர் கூறினார்.

அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம் என்று முராஷ்கோ கூறியுள்ளார்.

ஆயினும்கூட தடுப்பூசியை தயாரிக்க ரஷ்யா காட்டும் வேகம் சில மேற்கத்திய ஊடகங்களை சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது. அறிவியல் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னால் ரஷ்யா தனது கௌரவத்தை வைக்கிறதா என்று மேற்கத்திய ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளது.

ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிவ், தடுப்பூசி தயாரிப்பதில் ரஷ்யாவின் வெற்றியை, சோவியத் யூனியனின் 1957 ஆம் ஆண்டு உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்பூட்னிக் 1 ஏவுதலுடன் ஒப்பிட்டார்.

ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,058 ஆக அதிகரித்துள்ளது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 8,45,443 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்