அமெரிக்காவை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவின் தலைவரை கைது செய்துவிட்டோம்! ஈரான் அதிரடி அறிவிப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈரானில் குண்டுவெடிப்பு உட்பட பல மோசமான தாக்குதலுக்கு பின்னணியில் இருந்த அமெரிக்காவை தளமாக கொண்ட தீவிரவாத குழுவின் தலைவரை கைது செய்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு தெற்கு நகரமான ஷிராஸில் குண்டுவெடிப்பு மற்றும் பிற மோசமான தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்காவை தளமாகக் கொண்ட ‘டோண்டார்’ பயங்கரவாதக் குழுவின் தலைவரே ஈரான் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரானுக்குள் ஆயுத மற்றும் நாசவேலை நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த டோண்டார் குழுவின் ஜம்ஷித் ஷர்மத் இப்போது கைது செய்யப்பட்டு ஈரானின் பாதுகாப்புப் படைகளின் காவலில் இருக்கிறார் என்று உளவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரசு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்ஷித் ஷர்மர் எங்கே எப்படி கைது செய்யப்பட்டார் என்ற விவரத்தை ஈரான் வெளியிடவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்