இலங்கை, இந்தியா, சீனா உட்பட 30 நாடுகளின் விமானங்கள் நாட்டிற்கு நுழைய தடை..! குவைத் அதிரடி அறிவிப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகளை கருத்தில் கொண்டு, இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட 30 நாடுகளில் இருந்து வரும் வர்த்தக விமானங்களுக்கு குவைத் தடை விதித்துள்ளது;

இந்தியா, சீனா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் நுழைவதற்கும் குவைத் தடை விதித்துள்ளது.

குவைத் விமான போக்குவரத்து இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இயங்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இது தொடர்பான வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குவைத் நாட்டின் சுகாதாரத்துறை எடுத்த முடிவின் அடிப்படையில், பட்டியலிடப்பட்ட நாடுகளில் இருந்து வரும் எந்த வெளிநாட்டு பயணிகளும் குவைத் மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, ஈரான், சீனா, பிரேசில், கொலம்பியா, ஆர்மீனியா, வங்க தேசம், பிலிப்பைன்ஸ், சிரியா, ஸ்பெயின், சிங்கப்பூர், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, இலங்கை,

நேபாளம், ஈராக், மெக்ஸிகோ, இந்தோனேசியா, சிலி, பாகிஸ்தான், எகிப்து, லெபனான், ஹாங்காங் , இத்தாலி, வடக்கு மாசிடோனியா, மால்டோவா, பனாமா, பெய்ரூட்,

செர்பியா மாண்டினீக்ரோ, டொமினிகன் குடியரசு மற்றும் கொசோவோ ஆகிய நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு குவைத் தடை விதித்துள்ளது.

குவைத் வர்த்தக விமானங்களை ஓரளவு மீண்டும் தொடங்கத் தொடங்கிய அதே நாளில் இந்த தடை விதிக்கப்பட்டது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, குவைத் 67,448 கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் வைரஸ் தொடர்பான இறப்புகள் 453 ஆக உள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்