சிறுநீர் பைக்குள் 20-க்கும் மேற்பட்ட காந்த பந்துகள்! இளைஞனின் விபரீத செயல்: எச்சரிக்கை செய்தி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் இளைஞன் ஒருவர் தன்னுடைய மர்ம உறுப்பில் தொடர்ந்து உலோக பந்துகளை சொருகியதன் விளைவாக, மருத்துவர்கள் தற்போது அவரின் சிறுநீர் பையில் இருந்து 29 காந்த பந்துகளை அகற்றியுள்ளனர்.

சீனாவின் Shaanxi மாகாணத்தின் Xi'an நகரில் உள்ள No. 2 People's மருத்துவமனைக்கு இளைஞர் ஒருவர் சிறுநீரில் இரத்தம் வருவதைக் கண்டு சிகிச்சைக்காக சென்றார்.

அதன் பின் மருத்துவர்கள் அவரை சி.டி.ஸ்கேன் செய்தனர். அப்போது அவரின் சிறு நீர் பைக்குள் காந்த பந்துகள் இருப்பதைக் கண்டுள்ளனர்.

(Image: Kan Kan News)

இதை அறுவை சிகிச்சை மூலமே வெளியில் எடுக்க முடியும் என்று முடிவு செய்துள்ளனர்..

இது குறித்து சிறுநீர மருத்துவர் கியூ லி-மிங் கான் கூறுகையில்,நோயாளி அடிக்கடி வலியால் இரத்தத்தை உறிஞ்சுவதாக, அவரது அடிவயிற்றில் வலி இருப்பதாகவும் கூறினார்.

அதுமட்டுமின்றி, தனது மர்ம உறுப்பின் உள்ளே 29 காந்த மணிகளை ஒவ்வொன்றாக சொருகியதாக கூறினார். இதைக் கேட்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அப்படி செய்த 10 நாட்களுக்கு பிறகே அவரின் சிறுநீரில் இரத்தம் வந்துள்ளது.

(Image: Kan Kan News)

அறுவை சிகிச்சை மூலம் அவைகள் அகற்றப்பட்ட நிலையில், அவர் நல்ல நிலையில் இருக்கிறார். இருப்பினும் தொடர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

குறித்த நபரின் பெயர், விலாசம் போன்றவை அவரின் எதிர்காலம் கருதி குறிப்பிடவில்லை. மேலும் இது போன்று தேவையில்லாமல் செயலில் ஈடுபடும் நபர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை செய்தியும் ஆகும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்