வெளிநாட்டில் புகழ்மிக்க மாரியம்மன் கோவிலின் தலைமை பூசாரி கைது! அவர் தமிழரா? வெளிவரும் தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சிங்கப்பூரில் பழமையான இந்து கோவிலான மாரியம்மன் கோவிலின் தலைமை பூசாரி கோவில் நகைகள் மாயமான வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

சிங்கப்பூரில், ஒரு பழமையான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், அம்மனுக்கு அலங்காரம் செய்யும் தங்க நகைகளை, கோவில் கருவறையில் உள்ள பெட்டகத்தில், தலைமை பூசாரியின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வழக்கம்.

அதன் படி, சில நாட்களுக்கு முன், கோவில் அறக்கட்டளை சார்பில், நகைகளை தணிக்கை செய்யும் பணிகள் நடந்தன.

அப்போது, அம்மனின் நகைகள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, 36 வயது தலைமை பூசாரியிடம் கேள்வி எழுப்பிய போது, மாயமான நகைகள் அவரிடம் இருப்பதாக ஒப்புக்கொண்டு, திரும்ப ஒப்படைத்தார்.

இதையடுத்து அறக்கட்டளை அளித்த புகாரின் அடிப்படையில், பொலிசார் தலைமை பூசாரியை கைது செய்தனர்.

கடந்த சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவிலின் தலைமை பூசாரி திரு சிவாஷ்ரி கந்தசாமி சேனாபதியின் கட்டுப்பாட்டில் காணாமல் போன தங்க நகைகள் குறித்து பொலிஸ் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

36 வயது மதிக்கத்தக்க அவர் நம்பிக்கையை மீறியதற்காக கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

PHOTO: HINDU ENDOWMENTS BOARD/FACEBOOK

கோவிலில் பூஜையின் போது அடிக்கடி பயன்படுத்தப்படும் தங்க நகைகள் கோவிலின் உள் கருவறையில் பத்திரமாக, தலைமை பூசாரியின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

பூஜைக்கு பின் நகைகள் கணக்கிடப்படும். அப்படி கடந்த முறை தங்க நகைகள் கணக்கிடப்பட்ட போது, சில தங்க ஆபாரணங்கள காணமல் போயுள்ளது. இதனால் கோவிலின் தலைமை பூசாரியான சிவாஷ்ரி கந்தசாமி சேனாபதி விசாரிக்கப்பட்டார்.

அப்போது, அவர் காணாமல் போன தங்க ஆபரணங்கள் அனைத்தும், தன்னிடம் இருப்பதாக கூறி திருப்பித் தந்துள்ளார். இதன் பின் கோவில் கமிட்டியின் மேலதிக சோதனைகளாக அனைத்து தங்க நகைகளும் இருக்கிறதா என்பது குறித்து முழுமையாக கணக்கிடப்பட்டது.

தற்போது, கோவிலுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்ற போதிலும், இது குறித்து பொலிசாரிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து தலைமை பூசாரி கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீ மரியம்மன் கோவில் 1827 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இது சிங்கப்பூரில் இந்து வழிபாட்டாளர்களுக்கான முக்கிய கோயில்களில் ஒன்றாகும்.

Google Map

மேலும் கைது செய்யப்பட்டுள்ள திரு சிவாஷ்ரி கந்தசாமி சேனாபதி ஒரு தமிழர் என்று கூறப்பட்டாலும், விசாரணை ஆரம்பத்தில் இருப்பதால், அவரைப் பற்றி எந்த ஒரு முழு தகவலும் வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்