கொரோனா இறப்பு விவகாரம்... மொத்தமாக மூடி மறைத்தது அம்பலம்: வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரானில் கொரோனா தொடர்பில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை எனவும், மொத்தமாக மூடி மறைக்கப்பட்டுள்ளது எனவும் சர்வதேச ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் சீனாவுக்கு அடுத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு ஈரான்.

இந்த நிலையில் ஈரானில் இருந்து வெளிவரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுவரை ஈரானில் கொரோனாவுக்கு 17,000 பேர் மட்டுமே மரணமடைந்துள்ளதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், இது 80,000 கடந்திருக்கும் என தற்போது வெளிவந்துள்ளது.

மட்டுமின்றி சுகாதாரத்துறை வெளியிடும் கணக்குகளும் அரசாங்கம் வெளியிடும் கணக்குகளும் பொருந்தாமல் உள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

மேலும், கடந்த சில வாரங்களாக ஈரான் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையை எதிர்கொண்டு வருகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது.

ஈரானில் முதல் கொரோனா மரணம் ஜனவரி 22 ஆம் திகதி பதிவாகியுள்ளது. இந்த நிலையில் ஜூலை 31 ஆம் திகதி வரையான உள்ளூர் தகவல்களின் அடிப்படையில்,

ஈரானில் மொத்தமுள்ள 347 நகரங்களில் இதுவரை 80,100 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரியவந்துள்ளது.

இது அரசாங்கம் வெளியிட்டுள்ள கணக்குகளைவிட பல மடங்கு அதிகமாகும்.

தலைநகர் தெஹ்ரானில் மட்டும் 19,950 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இறப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையானது உள்ளூர் மருத்துவமனை மற்றும் கிராமங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை என கூறப்படுகிறது.

ஈரானில் கொரோனா பெருந்தொற்றின் ஆரம்ப மையமான கோம் நகரம் 1,419 இறப்புகளுடன் விகிதாசார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு கொரோனாவால் ஒவ்வொரு 1,000 பேருக்கும் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மேலும் ஈரான் முழுவதும் 1916 வெளிநாட்டவர்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்