ஓடும் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பிரபல தொகுப்பாளினி: மகன் கண்முன்னே நடந்த கொடுஞ்செயல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

உக்ரைனில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாகிய ஒரு இளம்பெண்ணை ஓடும் ரயிலில் ஒருவர் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, Anastasia Lugova (28) என்ற அந்த இளம்பெண், தனது ஆறு வயது மகன் Zakharஉடன் ரயிலில் சென்றுகொண்டிருந்திருக்கிறார்.

அதிகாலை சுமார் 3 மணியளவில் வெறும் உள்ளாடையுடன் நின்றுகொண்டிருந்த ஒருவர், Anastasiaவின் ஆடைகளை களைந்து அவரை வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.

திடுகிட்டு கண் விழித்த Anastasia, உதவி கோரி சத்தமிட்டாலும் யாரும் உதவிக்கு வரவில்லையாம்.

Anastasiaவை முகத்தில் முரட்டுத்தனமாக குத்திய அந்த நபர், நீ சத்தம் போட்டால் இன்னும் மோசமாக தாக்குவேன் என்று மிரட்டியிருக்கிறார்.

இதற்கிடையில் Anastasiaவின் மகன் கண் விழித்து, தாயின் நிலையைக் கண்டு பயந்து சத்தமிட ஆரம்பித்திருக்கிறான்.

உடனே அந்த நபர் சிறுவனை அடிக்கப்பாய, மகனைக் காப்பாற்றுவதற்காக, அவனை ஒன்றும் செய்யாதே, நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்று கண்ணீர் விட்டு கதறியிருக்கிறார் Anastasia.

உடனே, Anastasiaவை தனது இருக்கைக்கு அழைத்துச் சென்ற அந்த நபர், உடை களைய முயலும்போது, அவரை தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிய Anastasia, மகனைத் தூக்கிக்கொண்டு ரயிலின் நடத்துனரிடம் ஓடியிருக்கிறார்.

இதற்கிடையில், அந்த நபர் ஒரு போர்வையால் தன்னை மறைத்துக்கொண்டு Anastasiaவை தேடி வர, ரயில்வே ஊழியர்கள் அவரைப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

Vitaliy Rudzko (45) என்ற அந்த நபரை பொலிசார் கைது செய்து காவலில் அடைத்துள்ளார்கள்.

Anastasia மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, நடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்ற அவரது மகன் Zakhar, அம்மா உங்களை காப்பாற்றாததற்காக என்னை மன்னியுங்கள் என்று கூறி அழுதிருக்கிறான்.

Zakharக்கு மனோவியல் நிபுணர்கள் மன நல ஆலோசனை அளித்து வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்