கொரோனா வைரஸை ஒழிக்க உலகத்தால் முடியாது..!

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸை ஒழிக்க உலகத்தால் முடியாது என்று அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி பெளசி தெரிவித்துள்ளார்.

எனினும் தடுப்பூசி தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவர உதவும் என பௌசி கூறினார்.

நாம் இந்த கொரோனா வைரஸை கிரகத்திலிருந்து ஒழிக்க முடியாது என்று நான் கருதுகிறேன், ஏனென்றால் இது மிகவும் பயங்கரமாக பரவக்கூடிய வைரஸ், அதனால் ஒழிப்பது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.

ஆனால் ஒரு நல்ல தடுப்பூசி மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நாம் கொரோனாவை ஒழிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

அடுத்த வருடத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என பௌளசி கணித்துள்ளார்.

மேலும், 2021 ஆண்டில் கொரோனா கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நான் நம்புகிறேன், உணர்கிறேன் என்று அவர் கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்