80,000 குழந்தைகளுக்கு நேர்ந்த கதி..! பெய்ரூட் வெடி விபத்திற்கு பின்னர் நடந்தது என்ன? யுனிசெப் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்
336Shares

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் நகரம் முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மொத்தமாக சேதமடைந்ததால் 80,000 குழந்தைகள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது.

செவ்வாயன்று, பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் நகரம் முழுவதும் சிதைந்தன, சைப்ரஸில் வசிப்பவர்கள் நடுக்கம் உணர்ந்ததாக தெரிவித்தனர்.

இந்நிலையில், வெடி விபத்திற்கு பின்னர் 3,00,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து இப்போது இடம்பெயர்ந்துள்ளனர், இதில் கிட்டத்தட்ட 80,000 குழந்தைகள் அடங்குவர் என்று யுனிசெப் மதிப்பிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் இருக்கக்கூடும், உயிர் பிழைத்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்று யுனிசெப் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் குறைந்தது 12 ஆரம்ப சுகாதார மையங்கள், தாய், நோய்த்தடுப்பு மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கா மையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த வெடி விபத்தில் சிக்கி குறைந்தது ஒரு பிறந்த குழந்தை உயிரிழந்திருக்கும் என யுனிசெப் மதிப்பிட்டுள்ளது.

துறைமுகத்திற்கு அருகில் கரந்தினாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளை பராமரிக்க சிறப்பு பிரிவு இருந்தது, அது முற்றாக சேதமடைந்துள்ளது.

மீதமுள்ள மருத்துவமனைகள், அளவிற்கு அதிகமான நோயாளிகளாலும், அவசரகால மற்றும் கொரோனா சிகிச்கைக்கு தேவையான முக்கிய மருத்துவ பொருட்களின் குறைப்பாட்டாலும் அவதிப்படுகின்றன என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்