100 நாட்கள் கொரோனா வழக்கு இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பி மைல்கல்லை எட்டிய நாடு! மிகுந்த கவலையுடன் எச்சரித்த அதிகாரிகள்

Report Print Basu in ஏனைய நாடுகள்

100 நாட்கள் கொரோனா வைரஸின் உள்நாட்டு பரவுதல் இல்லாமல் கட்டுப்படுத்தி நியூசிலாந்து மைல்கல்லை எட்டி சாதித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான நியூசிலாந்தின் வெற்றிகரமான போராட்டம் தற்போது அந்நாட்டை உலகின் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது.

நியூசிலாந்த முக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர், ஆனால் மக்கள் இப்போது கொரோனா சோதனை மேற்கொள்ள மறுக்கிறார்கள், அரசாங்க தொடர்புத் தடமறிதல் செயலியை பயன்படுத்தவில்லை மற்றும் அடிப்படை சுகாதார விதிகளை கூட புறக்கணிக்கிறார்கள் என்று அதிகாரிகள் மிகுந்த கவலைப்படுகிறார்கள்.

சமூக பரவல் இல்லாமல் 100 நாட்கள் அடைவது குறிப்பிடத்தக்க மைல்கல், இருப்பினும், நாம் மனநிறைவுடன் இருக்க முடியாது.

ஏனெனில், ஒரு காலத்தில் கொரோனாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்து வியட்நாம் மற்றும் அவுஸ்திரேலிய போன்ற நாடுகள், தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனாவை பரவலை எதிர்த்துப் போராடி வருகின்றன என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் Ashley Bloomfield எச்சரித்தார்.

நியூசிலாந்தில்ஒட்டுமொத்தமாக 1,219 வழக்குள் பதிவான நிலையில் தற்போது 23 கொரோனா வழக்குள் தனிமைப்படுத்தும் மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்