வடகொரியாவில் வெள்ளத்தால் பேரழிவிற்குள்ளான கிராமத்திற்கு கிம் எப்படி போயிருக்கார் பாருங்க! கமெராவில் சிக்கிய புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் வெள்ளத்தால் கடும் சேதத்தை சந்தித்த கிராமத்திற்கு விலையுயர்ந்த காரில் சென்ற புகைப்படம் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வடகொரியா அதிபர் என்ன செய்தாலும் அது செய்தியாக மாறிவிடும். ஏனெனில் அவரின் நடவடிக்ககள் எல்லாம் அதிரடியாக இருக்கும், இல்லையெனில் சற்று வித்தியாசமாக இருக்கும்.

தண்டனைகள் மிகவும் பயங்கரமாக இருக்கும். இதன் காரணமாக அவரை சர்வாதிகாரி என்று கூறுவர்.

இந்நிலையில், அதிபர் கிம் ஜாங் உன், நாட்டில் வெள்ளத்தால் பேரழிற்குள்ளான கிராமத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் விலையர்ந்த காரான Lexus LX 570-யில் சென்றுள்ளார். ஒரு வெள்ளம் நிறைந்த பகுதிக்கு அவர் இப்படி ஒரு விலையுயர்ந்த காரில் சென்றுள்ளார்.

(Image: KCTV)

சமீபத்தில் அங்கு பெய்த கனமழை காரணமாக சுமார் 900-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியதால், தனது வருகையின் போது, கிம் சிறப்பு தானியங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பவும், சேதமடைந்த இடங்களை மீண்டும் கட்டியெழுப்ப சிமெண்ட் போன்ற தேவையான பொருட்களைப் பயன்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கே.சி.என்.ஏ) தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக தேவையான பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற தேவைகளை விரைவாக வழங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மாநில விவகார ஆணையத்தின் தலைவரின் இருப்பு உணவு தானியங்களுடன் வழங்குவதற்கான ஆவணத்தை சமர்ப்பிக்க அவர் சம்பந்தப்பட்ட துறைக்கு கிம் உத்தரவிட்டுள்ளார்.

ஏறக்குறைய 730 வீடுகளும் 600 ஹெக்டேர் நெல் வயல்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், 179 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிம் இதில் எந்தப் பகுதிக்குச் சென்றார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர் வியாழக்கிழமை சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஏனெனில் செவ்வாய்க்கிழமை முதல் இரண்டு நாட்களுக்கு ஹுவாங்கே மாகாணத்தில் சிறப்பு கன மழை எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்