61 வயது பெண்ணை காதல் திருமணம் செய்யும் 27 வயது இளைஞன்! ஈர்ப்பு ஏற்பட்டது எப்படி? தம்பதி பகிர்ந்த நம்பமுடியாத தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 61 வயது பெண்ணும் 27 வயது இளைஞனும் உயிருக்கு உயிராக காதலித்து வரும் நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

Temujin Tera (27) என்ற இளைஞனும், Jacqui Howard (61) என்ற பெண்ணும் தான் வயது வித்தியாசத்தை மீறி மகிழ்ச்சியாக இருக்கும் காதல் தம்பதி ஆவார்கள்.

Temujin கூறுகையில், Jacquiன் நடன பள்ளிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சென்று அவரிடம் மாணவனாக சேர்ந்தேன்.

நாங்கள் குரு - சிஷ்யனாகவே இருந்தோம். பின்னரே ஒருவர் மீது ஒருவருக்கு காதல் இருப்பதை உணர்தோம்.

எங்களுக்குள் பெரியளவில் வயது வித்தியாசம் இருப்பது தெரியும், பொதுவாகவே வயதான பெண்களிடம் எனக்கு ஈர்ப்பு உள்ளது. Jacquiக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர்,இதை பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை என கூறினார்.

Jacqui கூறுகையில், முதலில் நாங்கள் இருவரும் நண்பர்களாகவே இருந்தோம்.

பின்னர் நான் சிங்கப்பூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றேன், அங்கு Temujin பணியாற்றி வந்தார், அப்போது இருவரும் பேஸ்புக் மூலம் அதிகமாக பேசி கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம்.

நான் திருமணமாகி கணவரை பிரிந்தவள் என என்னை பற்றி எல்லா விடயங்களையும் அவரிடம் கூறிவிட்டேன்.

என்னையும், Temujin-வையும் பலரும் தம்பதி என்றே நம்பமாட்டார்கள்.

என் மகளும் Temujin-ம் ஒரே வயதுடையவர்கள், அவர் வீட்டில் எங்கள் காதலை ஏற்று கொண்டுவிட்டார்கள், ஆனால் என் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நண்பர்கள், உறவினர்கள் பலரை நாங்கள் தம்பதி என நம்ப வைக்க அவர்கள் முன்னிலையில் முத்தம் கூட கொடுத்து கொண்டோம்.

எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை, Temujinக்கு முன்னரே இறந்துவிடுவேன் என்பது தான் எனக்கு உள்ள ஒரே கவலை, ஏனெனில் என் வயது அப்படி என கூறியுள்ளார்.

அதே சமயம் Temujin கூறுகையில், மரணம் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம், என் மீது பேருந்து மோதி கூட நான் உயிரிழக்கலாம் என காதலிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்