லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடி விபத்து: வெடிப்பின் தாக்கத்தை கண் முன் காட்டும் ஒரு வீடியோ!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடி விபத்தின் தாக்கத்தை கண் முன் கொண்டு வரும் வீடியோ ஒன்று வெளியாகி உடலை சிலிர்க்கச் செய்துள்ளது.

ஆகத்து மாதம் 4ஆம் திகதி பெய்ரூட் துறைமுகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் என்னும் ரசாயனம் வெடித்துச் சிதறியதில் துறைமுகத்திலிருந்த அத்தனை கட்டிடங்களும் தரைமட்டமாகின.

இந்த விபத்தில் 160 பேர் கொல்லப்பட்டதோடு, 6,000 பேர் காயமடைந்தனர்.

அந்த வெடிப்பின் தாக்கம், ஒரு சிறு அணுகுண்டு வெடித்தால் என்ன தாக்கம் ஏற்படுமோ அந்த அளவுக்கு இருந்ததாக கூறப்பட்டது.

அந்த வெடி விபத்தின் தாக்கத்தால் 300,000 கட்டிடங்கள் நொறுங்கின. அப்படி கட்டிடங்கள் நொறுங்குவதைக் காட்டும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவை ஸ்லோ மோஷன் முறையில் இயக்கிக் காட்டும்போது, அந்த வெடி விபத்து கட்டிடங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காணமுடிகிறது.

வீடியோவின் முடிவில், வீடியோ எடுக்க பயன்படும் கமெராவும், இன்னொரு வகையில் கூறப்போனால், வீடியோ எடுத்தவரும் தூக்கிவீசப்படுவதை தெளிவாக உணரமுடிகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்