பெய்ரூட் பயங்கரம்... பெற்றோருடன் வேடிக்கை பார்த்த சிறுமி: மூன்று நாட்களுக்கு பிறகு நேர்ந்த துயரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தை பெற்றோருடன் வேடிக்கை பார்த்த சிறுமி காயங்களால் சிகிச்சை பலனின்றி 3 நாட்களுக்கு பிறகு மரணமடைந்துள்ளார்.

லெபனானில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 3 நாட்களுக்கு பிறகு 3 வயதேயான சிறுமி அலெக்ஸாண்ட்ரா நாகியர் காயங்களிலிருந்து மீளமுடியாமல் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தன்று சிறுமி அலெக்ஸாண்ட்ராவும் வெடிச்சத்தம் கேட்டு தங்களது அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னலில் இருந்து வேடிக்கை பார்த்துள்ளனர்.

முதல் வெடிவிபத்தின் தாக்கம் அவர்களை தாக்கலாம் என உணர்ந்த சிறுமி அலெக்ஸாண்ட்ராவின் தாயார் அவரை அள்ளிக்கொண்டு பாதுக்காப்பு தேடி குடியிருப்புக்குள் விரைய முயன்ற நேரம், பெய்ரூட் நகரத்தை மொத்தமாக உலுக்கியபடி இரண்டாவது விபத்து ஏற்பட்டுள்ளது.

நொடியில் இதன் தாக்கம், தாயாரின் கைகளில் இருந்த சிறுமி அலெக்ஸாண்ட்ராவை தூக்கி வீசியுள்ளது.

இறுதியில் சேதமடைந்த குடியிருப்பின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுமியை பெற்றோர் போராடி மீட்டுள்ளனர்.

பலத்த காயமடைந்த சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தாயாரும் மகளும் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 35 வயதான தாயாருக்கு விலா எலும்புகள் சில நொறுங்கியதுடன் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு ஒரு டசினுக்கும் அதிகமான தையல் தேவைப்பட்டது.

இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு பிறகு சிறுமி அலெக்ஸாண்ட்ரா சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

எனது மகள் வீரமரணமடையவில்லை, மாறாக அவர் கொல்லப்பட்டுள்ளார், குடியிருப்புக்குள் புகுந்து உங்கள் நிர்வாகம் கொன்றுள்ளது

என சிறுமி அலெக்ஸாண்ட்ராவின் தந்தை செய்தி ஊடகம் ஒன்றில் தமது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

மேலும், உங்கள் கட்சிகள் அனைத்தையும் கலைத்துவிட்டு இந்த வேண்டாத நிர்வாகத்தை அகற்ற ஒன்றுபடுங்கள் என அவர் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பெய்ரூட்டில் இதுவரை 158 பேர் அந்த வெடிவிபத்தில் சிக்கி கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 6,000 பேர் காயங்களுடம் சிகிச்சையில் உள்ளனர்.

300,000 பேர் குடியிருப்புகளை மொத்தமாக இழந்துள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்